Traffic Situation Improves Near Hosur Flyover Construction Zone | Hosur News Update - Video
Traffic Situation Improves Near Hosur Flyover Construction Zone
📅 வெளியீடு நாள்: 22-05-2026
📄 விளக்கம்
Traffic congestion near the ongoing suburban bus terminal flyover construction at Bathalapalli in Hosur has reportedly improved following intervention by district authorities.
The Krishnagiri District Collector conducted a field inspection and coordinated with police officials to implement traffic management measures.
Residents have appreciated the administration for responding to public concerns and improving vehicle movement in the affected stretch.
கிருஷ்ணகிரி ஆட்சியரை பாராட்டும் ஓசூர் மக்கள்!. ஏன்?
ஓசூர் பத்தலபள்ளியில் புதிய புறநகர் பேருந்து நிலையத்திற்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் கூடுதலான நீளத்திற்கு மேம்பாலம், நெடுஞ்சாலையில் கட்டுவதற்கான பணி துவங்கி உள்ளது.
இந்தச் சூழலில், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இத்தகவல் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஆலோசனையுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இப்பகுதி போக்குவரத்து நெரிசலை சீர் செய்வதற்கு, போக்குவரத்து காவல் சார் ஆய்வாளர் சக்திவேல் சிறப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல், சீராகி உள்ளது.
உரிய நடவடிக்கை மேற்கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு ஓசூர் பொதுமக்கள் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றனர்.








