HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Thenpennai, Chinnar and Kaveri Catchments Face Environmental Concerns, Say Volunteers

Published: 22-06-2026  ·  HosurOnline

விளக்கம்

Environmental volunteers have raised concerns about sewage-related issues affecting water bodies connected to the Thenpennai, Chinnar and Kaveri catchments across the Hosur, Thally and Anchetty regions.

Public debate in the region often focuses on wastewater entering the Thenpennai river system from Bengaluru. However, environmental volunteers argue that local sewage-related issues affecting water bodies connected to the Thenpennai, Chinnar and Kaveri catchments also require urgent attention.

According to volunteers, environmental concerns linked to lakes, streams and drainage systems in the Hosur, Thally and Anchetty regions deserve the same level of public discussion and administrative focus.

மற்றவர்கள் விட்டால் உங்களுக்கு ரத்தம் வரும்... ஆனால் நீங்க விட்டால் மற்றவர்களுக்கு தக்காளி சட்னியா?.

பெங்களூரு கழிவு நீர் தென்பெண்ணை ஆற்றில் கலந்து, கெலவரப்பள்ளி அணையில் நுரையாக வெளியேறுகிறது என கொதித்தெழும் நம்மவர்கள், ராமநாயக்கன் ஏரியில் விடப்படும் ஓசூரின் சாக்கடை மற்றும் மருத்துவமனை கழிவு நீர் குறித்தும் கொதித்தெழாமல் விடுவது ஏனோ?

இந்த ஒரு ஏரியை கெடுத்தது போதாது என்று, இந்த நீரை தர்கா ஏரி என்று அழைக்கப்படுகிற சந்திராம்பிகை ஏரிக்கு அனுப்பி, அதையும் நுரை தள்ள வைத்து, தென்பண்ணை ஆற்றில் கலக்கிறோம்.

இந்தக் கொடுமையோடு நிற்காமல், தளி ஏரியையும் பாழ்படுத்தி, பஞ்சப்பள்ளி அணை சின்னாராக தருமபுரிக்கு வெளியேற்றுகிறோம்.

இத்துடன் விட்டு விட்டோம் என்றால், அஞ்செட்டியில் இருந்து காவேரி ஆற்றுக்கு பாய்கிற தொட்டல்லா ஆற்றில் மொத்த அஞ்செட்டியின் கழிவு நீரும் பாய்கிறது.

தென்பெண்ணை, சின்னாறு, காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகள்... மூன்றும் கழிவுநீர் சவால்களை எதிர்கொள்கின்றன, இதற்கு பதில் சொல்லப் போவது யார்?.
பகிர்: WhatsApp X Facebook Threads