HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Lone Wild Elephant Spotted on Bettamugilalam Forest Road Near Hosur in Rare Daytime Sighting

Published: 21-07-2026  ·  HosurOnline

விளக்கம்

A lone wild elephant was spotted walking calmly along the Bettamugilalam Road in the Ayyur forest near Denkanikottai, close to Hosur, at around 12 noon.

The forest stretch between the Forest Department check post and Bettamugilalam is part of the elephant's natural habitat. Motorists maintained a safe distance and waited patiently until the elephant moved away, while forest officials reiterated the importance of not approaching or disturbing wild animals encountered on forest roads.

இன்று பகல் 12 மணிக்கு... சாலையில் நிதானமாக நடந்து சென்ற ஒற்றை காட்டு யானை!

ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர் காட்டில், பெட்டமுகிலாலம் செல்லும் சாலையில் இந்த காட்சி பதிவு செய்யப்பட்டது.

வனத்துறையின் சோதனைச் சாவடியில் இருந்து பெட்டமுகிலாலம் வரை சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவு, அடர்ந்த காடுகளின் வழியாக செல்கிறது. இந்த காடுகள் யானைகளின் இயற்கை வாழ்விடமாகும்.

இன்று நண்பகல் சுமார் 12 மணி அளவில், ஒற்றை காட்டு யானை சாலையில் நிதானமாக நடந்து சென்றது. யானையை கண்ட இருசக்கர மற்றும் சரக்குந்து ஓட்டுநர்கள், பாதுகாப்பான இடைவெளியில் காத்திருந்து ரசித்தனர்.

இந்த காட்சி சிலருக்கு பரபரப்பை ஏற்படுத்தினாலும், இயற்கை சூழலில் யானையை அருகில் காணும் வாய்ப்பு கிடைத்ததால் பலரும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஓசூர் பகுதி சாலைகளில் பயணிக்கும் பொழுது, யானை அல்லது பிற காட்டு விலங்குகளை கண்டால், அதன் அருகில் செல்லாமல், ஓசைகள் எழுப்பாமல், அமைதியாக தொலைவில் நின்று ரசிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads