HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Hosur Uzhavar Sandhai Farmers Seek Corporation Action Against Roadside Encroachments

Published: 27-07-2026  ·  HosurOnline

விளக்கம்

Farmers operating inside the Hosur Uzhavar Sandhai have alleged that roadside encroachments surrounding the market are reducing customer footfall and affecting their income. They say repeated requests to the Hosur City Municipal Corporation through the market administration have not resulted in action and are urging the civic body to remove the encroachments to ensure fair access to the market.

ஓசூர் மாநகராட்சி, ஓசூர் உழவர் சந்தை இயங்குவதற்கு ஒத்துழைப்பு நல்குவது இல்லை என, சந்தையில் கடை வைக்கும் உழவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓசூர் உழவர் சந்தை சுற்றுவட்டார சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ள ஏராளமான சிறு குரு விற்பனையாளர்கள், கீரை வகைகள் முதல் அனைத்து வகையான காய்கறிகளையும் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் கடுமையான சாலைப்போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும், சாலை ஓர ஆக்கிரமிப்பு கடைகளிலேயே காய்கறிகளை பொதுமக்கள் வாங்கிச் சென்று விடுகின்றனர் என்றும், சந்தை வளாகத்தில் கடை வைத்துள்ள உழவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவதாக, வேதனை தெரிவிக்கின்றனர்.

பலமுறை ஓசூர் மாநகராட்சி இடம், உழவர் சந்தை அலுவலர்கள் மூலம் கோரிக்கை விடுத்தும், சாலை ஓர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் மாநகராட்சி எடுக்கவில்லை என்றும், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, பொதுமக்களுக்கும், உழவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறார் என தெரிவிக்கின்றனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads