Contract Workers Protest at Exide Battery Plant in Hosur Demanding Wage Revision | Hosur News Update - Video
Contract Workers Protest at Exide Battery Plant in Hosur Demanding Wage Revision
📅 வெளியீடு நாள்: 03-08-2026
📄 விளக்கம்
Contract workers at Exide's battery manufacturing plant in Hosur staged a protest outside the factory, demanding a wage revision. Protesters claim production targets have increased following a wage agreement with permanent employees, while contract workers have not received a corresponding increase in wages.
ஓசூர் எக்சைடு பேட்டரி தொழிற்சாலையின் ஒப்பந்த ஊழியர்கள், தொழிற்சாலை வாயிலில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 750 நிரந்தர தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் ஓசூர் எக்சைடு தொழிற்சாலையில், 2000 ஒப்பந்த ஊழியர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, தொழிற்சாலை மேலாண்மையும், நிரந்தர தொழிலாளர்களும் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. அந்த ஒப்பந்தத்தின்படி, ஊதிய உயர்வுக்கு ஏற்ப, உற்பத்தி இலக்கும் உயர்த்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உற்பத்தி அளவு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்படவில்லை என்றும், அதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.








