Daily Hosur News · Video
Hosur Family Held Captive for 120 Days by Conman; ₹12 Lakhs and 25 Sovereigns Looted in Ritual Scam
விளக்கம்
A detailed investigative report on the extortion case in Kalegunda. The article explores how a youth was trapped via a fake phone romance, the physical abuse the family endured during "rituals," and how the fraudster was eventually caught after looting massive amounts of cash and gold.ஓசூர் வாலிபர் Digital Arrest?
"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு" என தொலைபேசி எதிர் முனையில் பேசிய பெண்ணை, நேரில் சந்திக்க கிருஷ்ணகிரி விரைந்துள்ளார், ஓசூர் எம்ஜிஆர் மார்க்கெட் பின்புறம் உள்ள காலேகுண்டா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர்.
"நீங்க காதலிச்சது என்னுடைய அக்கா... எங்க அக்கா வாழ்வதற்கு உங்கள் வீடு ஏற்புடையதா? முதலில் நான் பார்க்க வேண்டும்!" பெண்ணின் தம்பி என்று அறிமுகமாகி கூறிய நபர் ஒருவரை தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் இந்த இளைஞர்.
வீட்டில் உள்ள அனைவரிடமும் நன்றாக பேசிய அந்த நபர், வீட்டில் தீய சக்திகளின் பாதிப்பு இருப்பதாகவும், தன் அக்காவை இளைஞருக்கு திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டுமானால், பூஜைகள் செய்து தீட்டை நீக்க வேண்டும் என்றும், அத்தகைய பூஜைகள் செய்வதால் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செல்வம் வந்து சேரும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இந்த நபர் மேற்கொண்ட செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தால், நெருப்பால் சூடு, கன்னத்தில் பலர். பின்புறத்தில் நாலு சாத்து. அம்மனின் அருள் அப்படி செயல்படுகிறது என நம்ப வைத்துள்ளார்.
இதை நம்பிய குடும்பத்தினர், அந்த நபரிடம் கைதிகளாக சுமார் 120 நாட்கள் அடைபட்டு கிடந்துள்ளனர். இந்நிலையில், தான் காதலித்த பெண்ணும் வந்திருக்கும் நபரும் வெவ்வேறு குரல்களில் பேசும் திறமை கொண்ட ஒரே நபர்தான் என்பதை கண்டறிந்துள்ளார் இளைஞர்.
இதற்கிடையே பூஜை செலவினங்களுக்கு 12 லட்சம் ரூபாயை பணமாக வழங்கியுள்ளனர். மேலும் ,அணிந்திருந்த தங்க நகைகள் சுமார் 25 பவுன், பூஜை எனக் கூறி திருடிச் சென்று அடமானம் வைத்ததற்கான ரசீதும் இந்த குடும்பத்தாரிடம் கிடைத்துள்ளது.
இவ்வளவு கலவரத்திலும் தொலைபேசியில், "என்னைய விட்டுருங்க" என அந்த நபர் கெஞ்சும் நிலையில், பறிகொடுத்த பணத்தையும் நகையையும் மீட்டுக் கொடுங்கள் என குடும்பத்தார் காவல்துறையினரின் உதவியை நாடி வந்துள்ளனர்.