Welfare Scheme for Sanitation Workers Launched in Hosur - 1,300 to Benefit | Hosur News Update - Video
Welfare Scheme for Sanitation Workers Launched in Hosur - 1,300 to Benefit
📅 வெளியீடு நாள்: 09-02-2026
📄 விளக்கம்
A welfare initiative providing morning food support to sanitation workers was launched this morning in Hosur. The programme was inaugurated at an event held at KAP Marriage Hall by the Hosur MLA, with the Mayor and Deputy Mayor also present. As part of the event, leaders served breakfast to sanitation workers and interacted with them. Around 1,300 sanitation workers in Hosur are expected to benefit from the scheme.
ஓசூர் பொதுமக்களின் பாராட்டைப் பெற்ற, இந்தியாவிற்கே வழிகாட்டியாக அமைந்த திட்டம், இன்று காலை ஓசூரில் துவங்கி வைக்கப்பட்டது.
தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம், இன்று காலை கே ஏ பி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.
பின்னர், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர், மேயர், துணை மேயர் உள்ளிட்டோர் தூய்மை பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.
இத்திட்டத்தின் மூலம், ஓசூரில் சுமார் 1300 தூய்மை பணியாளர்கள் பயனடைவார்கள்.








