Daily Hosur News · Video
Sanamavu Land Protest: 350 People Demand Immediate Distribution of House Sites Amid Legal Deadlock
விளக்கம்
A comprehensive report on the protest held in Sanamavu. The article traces the history of the 2.75-acre land acquisition from 1998, the 2023 Supreme Court verdict, the tragic suicide attempt by landowners, and the current 2024 stay order that has stalled the distribution of sites to 41 beneficiaries.ஓசூர் அடுத்த சாணமாவில் சுமார் 350 பேர் போராட்டம்! திரளான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்!
கடந்த 1998 ஆண்டில் சாணமாவு ஊரைச் சேர்ந்த பட்டியல் இன நிலமற்ற 41 குடும்பங்களுக்கு, வீட்டு மனை வழங்குவதற்காக தனியார் பட்டா நிலத்தில் சுமார் இரண்டே முக்கால் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வருவாய்த் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நில உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களை நாடிய நிலையில், 2023-ல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வருவாய்த் துறையினரின் நடவடிக்கைக்கு ஆதரவாக வழங்கப்பட்டது.
தீர்ப்பை தொடர்ந்து, நில உரிமையாளர்களில் மூவர் நஞ்சு உண்டு, அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் வீட்டு மனைகளைப் பிரித்து வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலைத் தொடர்ந்து, 2024-ல் நில உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் தடை பெற்றதாக சூளகிரி வட்டாட்சியரும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலரும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நிலத்தை உடனடியாக பயனாளிகளுக்கு வழங்குமாறு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சாணமாவில் இன்று ஊர்வலம் மற்றும் போராட்டம் நடைபெற்றது.
காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் வருவாய்த் துறையினர் பல்வேறு வாக்குறுதிகளை போராட்டக்காரர்களுக்கு வழங்கியதை தொடர்ந்து, மக்கள் கலைந்து சென்றனர்.
"வருவாய்த் துறையினரின் இந்த நடவடிக்கை குறித்து என்ன கருதுகிறீர்களா? உங்கள் கருத்தை கமெண்டில் தெரிவியுங்கள்!"