HosurOnline

பாகலூரில் லாரியில் 12 யூனிட் M-Sand கடத்தல்: 4 பேர் கைது, லாரி பறிமுதல்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உட்கோட்டம் பாகலூர் காவல் எல்லைக்குட்பட்ட பேரண்டப்பள்ளி - தேவனபள்ளி STRR சாலை தமிழக எல்லையில், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தீவிர பயணிக்கும் வண்டிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்திச் ஆய்வு செய்தபோது, உரிய அனுமதியின்றி சட்டத்திற்குப் புறம்பாக 12 யூனிட் M-Sand கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட நான்கு நபர்களை பாகலூர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். 

மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியையும், 12 யூனிட் M-Sand-ஐயும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவலர்கள், கைதான 4 பேரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.