Tender Coconut Preferences in Hosur Linked to River Water Sources | Hosur News Update - Video
Tender Coconut Preferences in Hosur Linked to River Water Sources
📅 வெளியீடு நாள்: 19-03-2026
📄 விளக்கம்
In Hosur, local preferences for tender coconut appear to be influenced by the water source used for cultivation.
Two rivers originate from the surrounding hill forests — the South Pennar (Thenpennai) River and the Chinnar river near Thally.
Residents say that the Thenpennai river carries wastewater from upstream regions, which may affect the taste of coconuts grown using its water.
In contrast, the Chinnar river, flowing through forest regions and Panchapalli Dam, is widely used for coconut cultivation. A significant portion of tender coconuts sold in Hosur is said to come from this region.
This perception has shaped consumer choices in the area.
ஓசூரில் இளநீர் வாங்கும்போது கவனித்திருக்கீங்களா?. இந்த ஆற்று நீரில் விளைந்த இளநீரை மக்கள் தவிர்க்கிறார்கள்!.
சின்னாறுக்கும்… தென்பெண்ணை ஆறுக்கும் நடக்கிறது அமைதியான போட்டி!.
ஓசூரின் மலை காடுகளில் இரண்டு ஆறுகள் தோன்றுகின்றன. அதில் முதன்மையானது தென்பெண்ணை ஆறு.
இந்த ஆற்றில், பெங்களூரு மற்றும் ஓசூரின் கழிவு நீர் கலந்து செல்வதால், அதில் விளையும் இளநீர் துவர்ப்பு தன்மை கொண்டதாக இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.
அதே வேளையில், ஓசூர் அடுத்த தளி அருகே தோன்றும் சின்னாறு, பஞ்சப்பள்ளி அணை வழியாக, தருமபுரி மாவட்டம், மாறண்ட-அள்ளி பகுதிகளுக்கு பாய்கிறது.
இந்த நீரை பயன்படுத்தி விளையும் இளநீரே, ஓசூர் நகரில் பெரும்பாலும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.








