HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Quarry Dust Raises Concerns Among Farmers in Hosur Region

Published: 27-03-2026  ·  HosurOnline

விளக்கம்

Several stone quarries operate in and around the Hosur region, with concerns being raised about dust emissions affecting nearby agricultural lands.

According to local sources, dust from these quarries settles on farms, potentially impacting crop production.

When contacted, a quarry operator stated that compensation is being provided annually to farmers for any such impact.

Farmers in the area also acknowledged receiving compensation.

ஓசூர் பகுதி கல்குவாரிகளும், பறக்கும் தூசிகளும்.

ஓசூர் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான குவாரிகள் இயங்கி வருகின்றன. அவற்றிலிருந்து வெளியேறும் தூசுகள், அருகிலுள்ள விளை நிலங்கள் மீது படருகின்றன. இதனால் விளை பொருள் உற்பத்தி பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக ஓசூர் ஆன்லைன் சார்பில் குவாரி உரிமையாளரிடம் பேசிய போது, மா மற்றும் தென்னந்தோப்புகள் மீது படரும் தூசுகளுக்கு இழப்பீடாக ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்குவதாக கூறினார். இத்தகவலை பகுதி உழவர்களும் உண்மை என ஏற்றுக் கொண்டனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads