HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

K. Veeramani Addresses Campaign Meeting in Hosur

Published: 15-04-2026  ·  HosurOnline

விளக்கம்

Dravidar Kazhagam leader K. Veeramani addressed a campaign meeting near Ram Nagar in Hosur.

During his speech, he praised former Chief Minister J. Jayalalithaa and also expressed concerns regarding certain political alliances and policies.

He highlighted potential impacts on Tamil identity and referred to central government decisions affecting southern states.

ஓசூரில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி.

கடந்த நாள் மாலை, ஓசூர் ராம் நகர் நுழைவாயில் அருகே நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறந்த ஆளுமை திறன் கொண்டவர் என பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இம்முறை தமிழ்நாட்டு மக்கள் பா ஜ க தலைமையிலான அ தி மு க கூட்டணிக்கு வாக்களித்தால், தமிழர்களின் உணவு மரபும், இன அடையாளமும் பாதிக்கப்படும்” என எச்சரித்தார்.

மோடி அரசு, நெல் உற்பத்திக்கு ஊக்கத்தொகை வழங்குவதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதையும், வடநாட்டுக்கு அதிக அளவு மக்களவைத் தொகுதிகளை வரையறுக்கும் முயற்சி மேற்கொள்வதையும் சுட்டிக்காட்டி, தென்னிந்தியர்களுக்கு வஞ்சகம் இழைப்பதாக கூறினார்.
பகிர்: WhatsApp X Facebook Threads