HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Traditional 60-Year-Old Bakery Continues to Win Hearts Near Denkanikottai

Published: 28-05-2026  ·  HosurOnline

விளக்கம்

A decades-old bakery near Denkanikottai in the Hosur region continues to attract customers with its traditional baking methods and signature products.

The bakery, run by 70-year-old Selvaraj, still uses wood-fired ovens and homemade yeast prepared from sugarcane molasses.

Despite lacking modern branding or decoration, the bakery remains popular for its unique taste and long-standing tradition.


தேன்கனிக்கோட்டை அறுபது ஆண்டு பழமையான பேக்கரி மசாலா பன்னை ருசித்து இருக்கிறீர்களா?

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில், பேட்டராயசாமி கோவில் வளைவு அருகே, அஞ்செட்டி – பஞ்சப்பள்ளி அணை சாலை சந்திப்பில் அமைந்துள்ளது இந்த பழமையான பேக்கரி.

சுமார் 60 ஆண்டுகளாக, ரொட்டி, பன், பிஸ்கட் உள்ளிட்ட பேக்கரி பொருட்களை தொன்மையான முறையில், மரம் மற்றும் கோக் அடுப்பில் உற்பத்தி செய்கிறார்கள்.

இங்குள்ள சிறப்பு உணவுகள் — பூரி கிழங்கு நிரப்பிய மசாலா பன், இனிப்பு-உப்பு கலந்த காரா பன், மற்றும் மொறு மொறு தேங்காய் பிஸ்கட்.

மேலும், கரும்பு வெல்லச்சாற்றை பயன்படுத்தி ஈஸ்டையும் இவர்களே செய்து கொள்கிறார்கள்.

இந்த பேக்கரியை, 70 வயதான செல்வராஜ் நடத்தி வருகிறார். எப்போதும் காந்தி தொப்பியுடன் காணப்படும் இவர், பெயர் பலகை இல்லா கடைக்கு அடையாளமாக விளங்குகிறார்.

பெயர் பலகை இல்லை… ஜொலிக்கும் விளக்குகள் இல்லை… ஆனால், இங்கு சுவைதான் இன்றும் மக்களை தேடி வர வைக்கிறது.
பகிர்: WhatsApp X Facebook Threads