HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

How Hosur Is Producing Lakhs of Banana Saplings Using Tissue Culture Technology

Published: 01-06-2026  ·  HosurOnline

விளக்கம்

Hosur-based tissue culture facilities are producing 14 varieties of banana saplings. Learn how this technology helps farmers obtain disease-free, high-quality planting material.

ஓசூரில் ஒரு தாய் வாழையின் திசுக்களில் இருந்து லட்சக்கணக்கான வாழை கன்றுகளை உருவாக்கும் வேளாண் தொழில்நுட்ப புரட்சி!

14 வகையான வாழை இன கன்றுகளை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை நேரில் பார்ப்போம்.

ஏராளமான தொழிற்சாலைகள் நிறைந்த ஓசூர், காய்கறி மற்றும் கொய்மலர் உற்பத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.

ஓசூரை சுற்றியுள்ள பல நிறுவனங்கள், Tissue Culture எனப்படும் "திசு வளர்ப்பு" தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வாழை கன்றுகளை உற்பத்தி செய்து வருகின்றன.

அவ்வாறான ஒரு உற்பத்தி கூடத்தை பார்வையிட, சங்கர் பயோடெக் நிறுவனத்தின் உரிமையாளர் திரு சங்கர் அவர்கள் ஓசூர் ஆன்லைனுக்கு அனுமதி வழங்கினார்.

"இந்த நிறுவனத்தில் 14 வகையான வாழை இன கன்றுகள் திசு வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன" என்ற அவர், தொடர்ந்து கூறுகையில்,

"ஒரு சிறந்த தாய் வாழையின் திசுக்களில் இருந்து, ஒரே மாதிரியான தரத்துடன் லட்சக்கணக்கான கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன, இதன் மூலம் சீரான வளர்ச்சியும், அதிக மகசூலுக்கான வாய்ப்பும் கிடைக்கிறது." என தெரிவித்தார்.

"தேவைக்கேற்ப அதிக எண்ணிக்கையிலான கன்றுகளை விரைவாக உற்பத்தி செய்ய முடிவதுடன், நோய் தொற்று இல்லாத, பக்குவப்படுத்தப்பட்ட கன்றுகளையும் வழங்க முடிகிறது." எனக் கூறினார்.

மேலும், வாழை சாகுபடி செய்ய விரும்பும் உழவர்களுக்கு, தங்கள் பகுதிக்கு ஏற்ற வாழை ரகங்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகளும் வழங்க இயலும் என எடுத்துரைத்தார்.
பகிர்: WhatsApp X Facebook Threads