How Did a Raja Canal Reportedly Go Missing? The Story of Kelamangalam's Pattalamman Lake | Hosur News Update - Video
How Did a Raja Canal Reportedly Go Missing? The Story of Kelamangalam's Pattalamman Lake
📅 வெளியீடு நாள்: 01-06-2026
📄 விளக்கம்
A local activist's complaint regarding irrigation water at Pattalamman Lake in Kelamangalam led to official correspondence discussing encroachment issues and proposed action.
Years later, another communication reportedly stated that the Raja Canal and sluice could not be found, raising questions about the management of the lake and its irrigation infrastructure.
ராஜ கால்வாயை ஆட்டைய போட்டது யார்? கெலமங்கலம் ஏரியின் அதிர்ச்சி கதை!
ஓசூரை அடுத்த கெலமங்கலத்தின் ஊர் தேவதை பட்டாளம்மன். இந்த தேவதையின் பெயரைக் கொண்டது பட்டாளம்மன் ஏரி. இதன் பரப்பளவு அரசு ஆவணங்களின்படி சுமார் 30 ஏக்கர். ஆக்கிரமிப்பு போக மீதம் இருப்பது மிகக் குறைந்த அளவே!.
இந்த ஏரியில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படுவதில்லை எனக் கூறி, தன்னார்வலர் சிவப்பிரகாசம் 2018ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இதையடுத்து, 2018 ஏப்ரல் 3ஆம் நாள் கெலமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் வெளியிட்ட அறிவிப்பில், நேதாஜி நகரைச் சேர்ந்த வெங்கடராஜூலு ராஜ கால்வாயை ஆக்கிரமித்து, பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாதபடி அடைப்பு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், 2018 ஏப்ரல் 25ஆம் நாள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில், அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், 2023 மார்ச் 29ஆம் நாள் வரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மீண்டும் சிவப்பிரகாசம் மனு அளித்துள்ளார்.
அதற்கு செயல் அலுவலர் அனுப்பிய பதிலில், ஆக்கிரமிப்பு குறித்து எந்த தகவலும் குறிப்பிடாமல், கால்வாய் முறையாக தூர்வாரப்படாததே, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாத சூழலுக்கு அடிப்படை என தெரிவித்துள்ளார்.
அதன்பின் கெலமங்கலம் செயல் அலுவலர், 2023 ஜூலை 21ஆம் நாள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில், தாம் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டதாகவும், ராஜ கால்வாய் மற்றும் மதகுகளை காணவில்லை என்றும், அதை கண்டுபிடித்து தர தேன்கனிக்கோட்டை வட்டாட்சியரிடம் தாம் ரூபாய் 800 செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
திரைப்படத்தில் "கிணத்தை காணவில்லை" என்றால் நகைச்சுவை... ஏரியின் ராஜ கால்வாயையே காணவில்லை என்றால்? பதில் சொல்லுங்கள் பொதுமக்களே!








