HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Hosur Shopkeepers Allege Monthly Collections Linked to Plastic Carry Bag Usage

Published: 04-06-2026  ·  HosurOnline

விளக்கம்

Some roadside shopkeepers in Hosur have alleged that monthly payments are being collected in connection with the use of banned plastic carry bags, prompting calls for an inquiry.

ஓசூரில் இப்படியும் ஒரு வசூல் வேட்டை! எங்க உக்காந்து யோசிச்சு இப்படி புதுப்புது மொள்ளமாரித்தனத்தை கண்டுபிடிக்கிறார்கள்?

ஓசூரில் சில பெரும்புள்ளிகள், சாலை ஓரத்தை ஆக்கிரமித்து கடை வைத்திருப்பவர்களிடம் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வசூல் செய்வதாக எமக்கு நம்பத் தகுந்த தகவல் கிடைத்தது.

அதை தொடர்ந்து, அவ்வாறு கடை வைத்திருக்கும் சிலரிடம் பேசிய பொழுது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்துவதற்கு மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் மாமூல் கொடுப்பதாக தெரிவித்தனர்.

ஓசூர் மாநகராட்சி ஆணையர் இதில் கவனம் செலுத்த தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads