Concerns Raised Over Possible Demolition of More Than 2,500 Homes in Kelamangalam | Hosur News Update - Video
Concerns Raised Over Possible Demolition of More Than 2,500 Homes in Kelamangalam
📅 வெளியீடு நாள்: 06-06-2026
📄 விளக்கம்
Residents in Kelamangalam have expressed concern over reports that thousands of homes in multiple localities could face demolition, leading to calls for protest.
கெலமங்கலத்தில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் வீடுகளை இடிக்க முயற்சியா? கொந்தளிக்கும் மக்கள்.
கெலமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர், ஜீவா நகர், சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில், அரசு புறம்போக்கு மற்றும் இந்து அறநிலைத்துறை சார்ந்த நிலங்களில் கடந்த இரண்டு தலைமுறைகளாக, ஆக்கிரமித்து சுமார் 1500 வீடுகள் கட்டி மக்கள் குடியிருப்பதாக கூறப்படுகிறது.
அதே போல, ஓசாபுரம் மற்றும் அனேகொள்ளு பகுதிகளில், இந்து அறநிலை துறைக்கு சொந்தமான இடத்தில், 1007 வீடுகள் கட்டி பொதுமக்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
வீடுகளை இடிக்கும் முயற்சிக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்த சிபிஐ மாநில நிர்வாக குழு தோழர் லகுமைய்யா, வரும் திங்கள்கிழமை ஜூன் எட்டாம் நாள், தளி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார்.








