HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Over 200 Children in Bettamugilalam Tribal Villages Reportedly Lack Birth Certificates

Published: 06-06-2026  ·  HosurOnline

விளக்கம்

Parents and volunteers say more than 200 children in tribal villages under Bettamugilalam Panchayat do not have birth certificates, creating challenges in accessing education.

200-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பள்ளிகளில் சேர அனுமதி இல்லையா! ஏன்?.

பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 17 ஊர்கள் மலைவாழ் பழங்குடியின மக்கள் மட்டும் வாழும் பகுதியாக உள்ளது.

வழித்தடம் இல்லாத மலைப்பாங்கான பகுதிகளில் குடியிருப்பதால், மகப்பேறுகள் பல நேரங்களில் வீடுகளிலேயே நடைபெறுகின்றன.

பொருளாதார மற்றும் கல்வி குறைபாடு உள்ள இந்த ஏழை எளிய மக்கள், அரசு ஏடுகளில் பிறப்புகள் குறித்து பதிவு செய்யாமல் விட்டு விடுகின்றனர். இதனால், 10 வயது குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலை உள்ளது என தெரிவிக்கின்றனர்.

இத்தகைய சூழலில், குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து கல்வி பயிலும் வாய்ப்பு தடை ஏற்படுவதாக தன்னார்வலர்களும் பெற்றோரும் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு இதில் தனி கவனம் செலுத்தி, அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த குழந்தைகளுக்கும் கல்வி பயில வாய்ப்பு ஏற்படுத்தித் தருமா?.
பகிர்: WhatsApp X Facebook Threads