HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Questions Raised Over Absence of a Permanent Executive Officer in Kelamangalam

Published: 16-06-2026  ·  HosurOnline

விளக்கம்

Residents and volunteers have raised concerns regarding the reported lack of a permanent Executive Officer in Kelamangalam and are seeking clarification from the relevant authorities.

கெலமங்கலம் ஊராட்சிக்கு ஏன் நிரந்தர செயல் அலுவலர் பணியமர்த்தப்படுவதில்லை? பொதுமக்கள் கேள்வி.

தன்னார்வலர்கள் வட்டாரத்தில், இதுகுறித்து கற்பனை கதை ஒன்று கூறப்படுகிறது. அதாவது, கெலமங்கலம் ஊராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலராக பதவி ஏற்பவர், நகரின் தூய்மை தொடர்பான பணியில் இருக்கும் ஒருவர் சொல்பேச்சை கேட்டு தான் நடந்து கொள்ள வேண்டுமாம். அவரை மீறி செயல்படுவதாக இருந்தால், செயல் அலுவலருக்கு எதிராக மாமன்ற உறுப்பினர்களை போராட்டத்தில் ஈடுபட அந்த நபர் தூண்டி விட்டு விடுவாராம். அரசியல் பின்னணி தமக்கு இருப்பதாக கூறி, மிரட்டி, மாறுதல் பெற வைத்து விடுவதாக கூறுகிறார்கள்.

கெலமங்கலம் ஏரி மாசடைந்து கிடப்பதற்கும், ராஜ கால்வாய் ஆக்கிரமிப்பிற்கும், அந்த குறிப்பிட்ட மர்ம நபரே காரணமாக திகழ்வதாக தன்னார்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகின்றனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads