Exploring Neralahatti: The Village Associated With Rajinikanth's Early Life | Hosur News Update - Video
Exploring Neralahatti: The Village Associated With Rajinikanth's Early Life
📅 வெளியீடு நாள்: 17-06-2026
📄 விளக்கம்
HosurOnline visited Neralahatti near Anchetty and documented locations that local residents associate with the family history of Superstar Rajinikanth.
தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த வளர்ந்த ஊரில் நாம் கண்ட காட்சி!.
ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே, உரிகம் மலை காடுகளின் அடிவாரத்தில், கர்நாடக மாநிலத்தின், கனகபுரா சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, "நேரலாஹட்டி", ரஜினி பிறந்து வளர்ந்த ஊர்.
ரஜினியின் குடும்பத்தினர் அப்பகுதியில் வாழ்ந்ததற்கான சுவடுகளாக, கால்நடைகளுக்கான தண்ணீர் தொட்டி, விளைநிலத்திற்கான கிணறு, மற்றும் சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட, எவ்வித பராமரிப்பும் அற்ற தோட்டம் உள்ளது.
கிணற்றின் ராட்டினம் கட்டும் பகுதியில் கன்னடத்தில், "ரஜினிகாந்த் தாயார் ராமாபாய்..." என எழுதியுள்ளதாக, எழுத்துக்களை படித்துக் கூறியவர் எமக்கு தெரிவித்தார். புதிதாக கட்டப்பட்ட சிவன் கோவிலும், கோவிலின் அருகே, கேட்பாரற்று இருக்கும் ஒரு வீடும் உள்ளது.
அருகே ரஜினி சித்தியின் கல்லறை உள்ளது.
மராத்தி பேசும் ரஜினியின் இனத்தைச் சார்ந்த ஊர் மக்களிடம் ரஜினி குறித்து கேட்டபோது, பலர் கருத்து தெரிவிக்க விரும்பாமல் விலகிச் சென்றது கவனிக்கத்தக்கதாக இருந்தது.








