HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Karnataka Lorry Owners Protest at Attibele Over Tamil Nadu's Mineral Transport Restriction

Published: 31-07-2026  ·  HosurOnline

விளக்கம்

Lorry owners and drivers from Karnataka held a protest at Attibele, near the Hosur border, opposing the Tamil Nadu Government's temporary restriction on transporting M-Sand, blue metal, and other mineral materials to other states. The protesters alleged that the order has significantly affected the livelihoods of thousands of transport operators.

ஓசூரை அடுத்த அத்திப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்... இது இதுவரை இல்லாத புதுசு...

தமிழ்நாட்டில் இருந்து எம்-சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கனிமப் பொருட்கள் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை மூன்று மதங்களுக்கு தடை செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டது.

இதனால் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், பட்டினியால் வாடும் சூழல் உருவாகியுள்ளது எனக் கூறி ஓசூர் எல்லையில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு உழவர்கள் தங்கள் உரிமையான காவிரி நீரை பெற முயன்றால், இதே அத்திப்பள்ளியில், தமிழக நலனுக்கு எதிராக, இதே கொடிகளுடன் ஆர்ப்பாட்டங்களை கன்னட அமைப்பினர் நடத்துகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
பகிர்: WhatsApp X Facebook Threads