Residents Say Street Dogs Alerted Hosur Neighbourhood During Burglary; One House Looted | Hosur News Update - Video
Residents Say Street Dogs Alerted Hosur Neighbourhood During Burglary; One House Looted
📅 வெளியீடு நாள்: 31-07-2026
📄 விளக்கம்
A burglary has been reported in Brindavan Nagar near Lakshmi Theatre in Hosur. According to local residents, suspected burglars moved through the locality during the early hours of July 28. One house was allegedly broken into after the occupants had been away for four days. Residents believe the barking of street dogs alerted people in the neighbourhood and may have disrupted further burglary attempts. Police are investigating the incident.
ஓசூர் பிருந்தாவன் நகர் லட்சுமி திரையரங்கு அருகே, தெரு நாய்களின் குரைப்பால் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியதாகக் கூறப்படும் பல வீடுகள்!. ஒரு வீட்டில் மட்டும் பதினோரு பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் திருட்டு என அப்பகுதி மக்கள் தகவல்.
வெறுக்கப்பட்ட தெரு நாய்களே ஹீரோக்களான இரவு! கொள்ளையர்களிடம் இருந்து பல வீடுகளை காப்பாற்றியதாக பகுதி மக்கள் நெகிழ்ச்சி.
திருடர்களின் நடமாட்டம் ஜூலை 28 ஆம் நாள் விடிகாலையில் நிகழ்ந்துள்ளது. நான்கு நாட்களாக ஊருக்குச் சென்ற ஒரு குடும்பத்தினர், தங்களது வீட்டிற்கு கடந்த நாள் வந்த நிலையில், வீட்டின் பின்புற சாளரத்தின் இரண்டு கம்பிகளை அறுத்து, திருடர்கள் வீட்டின் உள்ளே புகுந்து திருடி இருப்பது குறித்து அறிந்தபின், பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து உள்ளனர்.
அதன் பின்னரே திருடர்களின் நடமாட்டமும் திருட்டு நிகழ்வும் பகுதி மக்களுக்கு தெரிய வந்துள்ளது. முகமூடி கொள்ளையர்கள் ஓசூர் நகர் பகுதியில் நடமாடுகிறார்கள் என்பதை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.








