HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Dangerous Incline at Perandapalli STRR Underpass Sparks Accident Fears Among Residents

Published: 04-10-2026  ·  HosurOnline

விளக்கம்

A detailed report on the safety concerns surrounding the MDR 1136 underpass construction. The article highlights the risks for heavy vehicles, comparisons to the Gopachandram accident zone, and the formal plea from the public to the highway authorities for a structural review.

ஓசூர் அடுத்த பேரண்டபள்ளியில், எஸ் டி ஆர் ஆர் சாலை அண்டர் பாசினால், சாலை விபத்து ஏற்படும் நிலையா?

மேஜர் டிஸ்ட்ரிக்ட் ரோடு - எம் டி ஆர் 1136, கெலமங்கலம் துவங்கி, பேரண்டபள்ளி, கதிரேபள்ளி வழியாக அத்திமுகம் வரை நூற்றுக்கணக்கான ஊர்களை இணைக்கும் முதன்மையான சாலையாக விளங்குகிறது. ஏராளமான கனரக சரக்கு வண்டிகள் பயணிக்கின்றன.

இந்நிலையில், பேரண்டபள்ளி அடுத்த கதிரேபள்ளி அருகே, எஸ் டி ஆர் ஆர் நெடுஞ்சாலையை கடக்க அமைக்கப்படும் அண்டர் பாஸ் செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளதால், கனரக சரக்கு வண்டிகள் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழக்கும் சூழலில், செங்குத்தான இறக்கத்தில் வண்டி சரிந்து கோபச்சந்திரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டது போன்ற சூழல் ஏற்படலாம் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஆகவே, அண்டர் பாஸ் அமைக்கப்பட்டு வரும் சாலை பகுதியை முறையாக ஆய்வு செய்து, விபத்து ஏற்படாத வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்களும் தன்னார்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads