Daily Hosur News · Video
Contract Workers Protest at Hosur Tata Electronics Over Low Wages and Alleged Exploitation
விளக்கம்
A detailed report on the demonstration held at the Tata Jasmine factory gate in Hosur. The article covers the workers' grievances regarding the ₹500 daily wage limit, monthly deductions by contractors, and allegations of intimidation by factory managers.ஓசூர் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் பிராடக்ட்ஸ் அண்ட் சொல்யூஷன்ஸ் வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் முறையான ஊதியம் வேண்டி ஆர்ப்பாட்டம்.
டாடா நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு நாளொன்றிற்கு 500 ரூபாய்க்கும் குறைவான ஊதியம் வழங்குவதாக கூறப்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் மூலமாக இந்த ஊதியம் வழங்கப்படுவதால், 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை பல்வேறு தகவல்களை கூறி, ஒவ்வொரு மாதமும் ஒப்பந்ததாரர்கள் பிடித்தம் செய்து கொள்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் டாடா நிர்வாகத்திடம் எடுத்துக் கூறிய போது, குறிப்பாக பெண்களை மிரட்டும் விதமாக மேலாளர்கள் பேசுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
எங்களது உழைப்பை சுரண்ட வேண்டாம் என்கிற முழக்கத்துடன் டாடா ஜாஸ்மின் தொழிற்சாலை வாயிலில் இன்று பாதிப்புக்கு உள்ளான ஒப்பந்த தொழிலாளர்களில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.