Daily Hosur News · Video
Thenkanikottai Woman Alleges Forced Child Marriage at 16; Appeals to District Collector for POCSO Action
விளக்கம்
A detailed report on the allegations made by a young woman in Thenkanikottai regarding her forced marriage to a middle-aged man three years ago. The article covers her struggle with the local police department and her formal request for the District Collector to ensure legal justice.ஓசூர் அடுத்த தேன்கனிகோட்டையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், 16 வயதில் விடுதியில் தங்கி பள்ளி படிப்பு படித்து வந்த தம்மை, "அவசரமாக கோவிலுக்கு வா" என அழைத்து, 45 வயது முதியவருடன் கட்டாய குழந்தை திருமணம் செய்து வைத்ததாக பெற்றோர் மற்றும் அந்த முதியவர் மீது இளம்பெண் குற்றச்சாட்டு!
முதியவரிடமிருந்து தப்பி, தான் விரும்பிய இளைஞரை திருமணம் முடித்த நிலையில், தேன்கனிக்கோட்டை அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தும், போக்சோ வழக்கு பதியாமல், தன் மீதே நகையை எடுத்துச் சென்று விட்டதாக குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளதாகவும், குழந்தை திருமணம் முடித்த அந்த 45 வயது முதியவருடன் சேர்ந்து வாழ பெற்றோர் காவல்துறை உதவியுடன் கட்டாயப்படுத்துவதாக இளம்பெண் கண்ணீர்!
முறையாக போக்சோ வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்குமா தேன்கனிக்கோட்டை காவல்துறை? மாவட்ட ஆட்சியர் இதில் உதவ வேண்டும் என இளம்பெண் கோரிக்கை.