HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Stray Dog Menace in Hosur: Legal Experts Advise Arrests for Feeding in Public Areas Amid Dumping Allegations

Published: 08-10-2026  ·  HosurOnline

விளக்கம்

A comprehensive report on the multi-faceted stray dog issue in Hosur. The article covers YVS Reddy's claims of dogs being abandoned by Karnataka local bodies, the Supreme Court's January 13 ruling on feeder responsibility, and the challenges faced by Corporation staff during sterilization efforts.

ஓசூரில், பெங்களூர் பகுதியில் பிடிக்கப்படும் தெரு நாய்கள், கொண்டு வந்து விடப்படுகிறதா? "ஆம்" என்கிறார் ஓசூர் தன்னார்வலர் ஒய் வி எஸ் ரெட்டி!

ஓசூர் மாநகராட்சி தெருநாய்களைப் பிடித்து கருத்தடை செய்ய முயன்றால், “நாய்களின் காவலர்கள்” என்ற போர்வையில் மாநகராட்சி பணியாளர்களை சிலர் தாக்க முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கடந்த ஜனவரி 13-ஆம் நாள், நீதியரசர்கள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, நாய்களுக்கு உணவளிப்பவர்களை, நாய்க்கடிகளுக்கு பொறுப்பாளர்களாக கருத வேண்டும் என தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் பூங்கா பகுதிகளில் தெருநாய்களுக்கு உணவளிப்பவர்கள் மீது, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஓசூர் மாநகராட்சியை சட்ட வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். ஒருசிலர் மீது எடுக்கப்படும் கைது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள், உணவளிக்கும் மற்றும் இடையூறு ஏற்படுத்துவோருக்கு படிப்பினையாக அமையும் என்று கூறுகின்றனர்.

பிற பகுதிகளில் இருந்து தெருநாய்கள் ஓசூருக்குள் கொண்டு வந்து விடப்படுகிறதா என்பதையும், ஓசூர் மாநகராட்சி தீவிரமாகக் கண்காணித்து, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads