HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Prominent Hosur Volunteer Dr. Muhammad Alimuddin Attacked by Stray Dogs; Residents Demand Urgent Corporation Action

Published: 07-10-2026  ·  HosurOnline

விளக்கம்

A report on the stray dog attack near Ramanaicken Lake involving Dr. Muhammad Alimuddin. The article covers his grievances, the potential risk to other high-profile walkers like the Mayor, and the public's demand for the Hosur Corporation to secure the Velankanni School zone.

ஓசூரில் அங்க கடிச்சு, இங்க கடிச்சு கடைசியில் VIPயின் காலை கடித்துக் குதறிய தெருநாய்.

ஓசூர் மேயரும் அந்த வழியில்தான் நாள்தோறும் காலையில் நடைப்பயிற்சி செய்கிறாராம்.

ஓசூர் தன்னார்வலர் மைஜா பாய் என்று அழைக்கப்படும் முனைவர் முகம்மது அலிமுதீன் இன்று காலை ராமநாயக்கன் ஏரி பூங்கா அருகே வழக்கமான நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்தாராம்.

அப்போது நான்கு தெரு நாய்கள் தம்மை திடீரென சூழ்ந்து காலில் கடித்துக் குதறியதாக தெரிவிக்கிறார்.

நாய்களுக்குப் பாதிப்பு என்றால் குரல் கொடுக்கும் சில அமைப்புகள், வயது முதிர்ந்த தம்மை போன்றவர்களைத் தெரு நாய்கள் கடித்தால் வாய் மூடி மௌனியாக இருப்பது ஏன்? என்ற கேள்வியை எழுப்புகிறார்.

மாநகராட்சி உடனடியாக வேளாங்கண்ணி பள்ளி அருகே சுற்றித் திரியும் திருநாய்க்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அறிவார்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads