Daily Hosur News · Video
Alcohol Addiction Leads to Double Tragedy in Hosur Muthamizh Nagar; Couple Found Dead
விளக்கம்
A detailed report on the deaths of a husband and wife in the Muthamizh Nagar area of Chinna Elasagiri. The article explores the background of the family from Natrampalayam, the history of domestic disputes linked to alcohol, and the preliminary findings of the investigation.குடியால் கெட்டது குடி! ஓசூர் சின்ன எலசகிரி முத்தமிழ் நகரில் குடிக்கு அடிமையானதால் பரிபோன இரண்டு உயிர்கள்.
அஞ்செட்டி அடுத்த நாற்றம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவி, ஓசூர் சின்ன எலசகிரி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்துள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணமான நிலையில், மகனுடன் அப்பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, மாடுகள் வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கணவர் மது போதையில் மனைவியை தாக்குவது வழக்கமாம். ஒவ்வொரு முறையும் மகன் தடுத்து வந்துள்ளார்.
கடந்த நாள் மகன் வீட்டில் இல்லாத பொழுது, கணவர் தாக்கியதில் மனைவி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மனைவியின் உயிரிழப்பிற்கு தானே பொறுப்பு என கணவரும் உயிரை மாய்த்துள்ளார் என முதற்கட்டமாக அறியப்படுகிறது.
2000 ஆண்டுகளுக்கு முன்பே கள் உண்ணாமை போதித்த திருவள்ளுவரை போற்றும் தமிழ் இனம், இன்று வரை மீளாமல் இருப்பது ஏனோ?