Daily Hosur News · Video
Mass Fish Kill in Hosur Temple Pond Sparks Health Fears; Chemical Contamination Suspected
விளக்கம்
A detailed investigation into the rising pollution levels in Hosur's interconnected lake system. The article links the recent fish deaths at Jalakandeswarar Temple to illegal chemical waste from Ganesha idol manufacturing and calls for urgent intervention by the Pollution Control Board.ஓசூர் கோவில் குளத்தில் கொத்துக் கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்! அடுத்த ஆபத்து மனிதர்களுக்கா?!
மத்திகிரி கர்னூர் ஏரி மறுகால் பாய்ந்து அந்திவாடி ஏரியை அடைந்து, அங்கிருந்து ராமநாயக்கன் ஏரி வழியாக சந்திராம்பிகை ஏரி என அடுத்தடுத்த ஏரிகள் வழியாக தென்பெண்ணை ஆற்றை அடைகிறது.
குறிப்பாக, கர்னூர் ஏரி மற்றும் அந்திவாடி ஏரி இடைப்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட POP மற்றும் ஆயில் பெயிண்ட் பயன்படுத்தி விநாயகர் சிலைகள் உற்பத்தி வெளிப்படையாக தங்கு தடையின்றி செயல்பட்டது.
சிலைகள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட வேதிக்கழிவுகள், நீர் நிலைகளில் கலந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராம நாயகன் ஏரியில் கருப்பு நிற நீர்மம் ஒளிரும் தன்மையுடன் தென்படுவதாக தன்னார்வலர் ஒருவர் எமக்கு சில புகைப்படங்களை அனுப்பி இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, இன்று மற்றொரு தன்னார்வலர், ஜலகண்டேஸ்வரர் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களின் காணொளியை பகிர்ந்துள்ளார்.
மீன்களுக்கு ஏற்பட்ட நிலை, மனிதர்களாகிய நமக்கு ஏற்பட எவ்வளவு காலம் பிடிக்கும்?