தொழிலதிபரை தாக்கி கொள்ளை: 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு!
பர்கூர் அருகே தொழிலதிபரைத் தாக்கி நகை பறித்த வழக்கில் கைதான 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி, கிருஷ்ணகிரி புஷ்பகிரி கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அருள்சுந்தரத்தை (42) வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல், அவரைத் தாக்கி 3.5 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றது. இதுகுறித்த புகாரில் கந்திகுப்பம் போலீசார் 7 பேரைக் கைது செய்தனர்.இவர்களில் முக்கியக் குற்றவாளிகளான அசோக்குமார் (24), காதர் பாஷா (22), விஷ்ணு (23) ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க எஸ்பி அனிதா பரிந்துரைத்தார். மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில், மூவரும் வியாழக்கிழமை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.