HosurOnline
HosurOnline  ›  தமிழ் சினிமா  ›  மேக்கப் இல்லாமல் போட்டோ எடுத்தது ஏன்? காஜல் அகர்வால்
தமிழ் சினிமா

மேக்கப் இல்லாமல் போட்டோ எடுத்தது ஏன்? காஜல் அகர்வால்

மேக்கப் இல்லாமல் போட்டோ எடுத்தது ஏன்? காஜல் அகர்வால்

முகப் பூச்சுகள் ஏதும் இல்லாமல் புகைப்பட தொகுப்பு எடுத்து, அந்த புகைபடங்களை தனது சமூக வலைத்தளத்தில் துணிச்சலுடன் வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.

இது குறித்து அவர் ஓசூர் ஆன்லைனிடம் கூறுகையில், ‘இன்றைய சூழ்நிலையில் மனிதர்களால் தங்களை அடையாளம் காண முடியவில்லை. ஏனெனில், உடல் அழகை கண்டு மயங்கும் உலகில் வாழ்வதால் இருக்கலாம்.

சமூக ஊடகங்கள் யாரை, எப்போது முன்னிலைப்படுத்துகிறது என்பதில் நம் தன் மரியாதையை விழுங்கியதால் கூட இருக்கலாம். அனைவருக்கும் கச்சிதமான உடலை ஏற்படுத்திக் கொடுப்பதாக வாக்கு தரும் அழகு பொருட்கள் வாங்க, நாள்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.

தற்பெருமையான செயல்கள் இப்போது எல்லா இடத்திலும் பார்க்க முடிகிறது. நம்முடைய வேறொரு அடையாளத்தை பெற முயற்சிப்பதை விட, நமது உண்மையான முகத்தை ஏற்றுக்கொண்டால் மகிழ்வாக இருக்க முடியும்.

முக அழகு செய்வது நம் புறத்தோற்றத்தை அழகாக காட்டலாம். ஆனால், உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்வதில் மட்டுமே உண்மையான அழகு இருக்கிறது’ என்றார்.

ஓசூர் பையன்:  பய புள்ள 33 வயதானாலும், கும்முன்னு இருக்கு... என்னத்த குடிக்குதோ தெரியல?

Share this Post: Facebook X / Twitter WhatsApp