Overnight Poo Karagam and Pallakku Festival Held in Hosur Ahead of Malai Kovil Celebrations | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Overnight Poo Karagam and Pallakku Festival Held in Hosur Ahead of Malai Kovil Celebrations

📅 வெளியீடு நாள்: 07-02-2026

📄 விளக்கம்

As part of the Hosur Malai Kovil festival scheduled for March 3, Poo Karagam and Pallakku processions were held from last night until early morning in Hosur. Decorated palanquins carrying Chandrachoodeswarar and other deities were taken through the town’s main streets, accompanied by traditional music and devotional dances. Large numbers of devotees participated in the overnight celebrations.

ஓசூர் மலைக்கோவில் என்று அழைக்கப்படும் சந்திர சூடேஸ்வரர் கோவிலின் திருவிழா வருகிற மார்ச் மூன்றாம் நாள் நடைபெற இருக்கிறது. இதை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஓசூரில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த நாள் இரவு துவங்கி, இன்று விடிகாலை வரை, விடிய விடிய பூ கரகம் மற்றும் பல்லக்கு திருவிழா நடைபெற்றது.

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில், சந்திர சூடேஸ்வரர், விநாயகர், முருகர், மாரியம்மன், எல்லம்மன், காளியம்மன் என ஏராளமான சுவாமிகள் ஓசூரின் முதன்மையான தெருக்கள் வழியாக உலா வந்தனர்.

மேளதாளங்கள் முழங்க, பூ கரகம் ஆடியவாறு, சிறப்பான வகையில் வழிபாடுகளை மக்கள் நடத்தினர்.

விடிய விடிய நடைபெற்ற இந்த விழாவில், ஓசூர் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads