₹20 Crore Commercial Complex Inaugurated Near Hosur Bus Stand | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

₹20 Crore Commercial Complex Inaugurated Near Hosur Bus Stand

📅 வெளியீடு நாள்: 13-03-2026

📄 விளக்கம்

A new commercial complex constructed at a cost of approximately ₹20 crore has been inaugurated near the Hosur Bus Stand.

The building, spread across around 90,000 square feet, has been constructed by the Local Administration Department after demolishing the old municipal office building that previously existed at the location.

The facility was inaugurated by the Tamil Nadu Chief Minister through video conference. The event was attended by the Hosur Member of Parliament, Member of Legislative Assembly, Mayor, Corporation Commissioner and other officials.

Volunteers and some residents have suggested that instead of renting out the building as individual shops, the Hosur Corporation could explore the possibility of developing it as a multi-purpose commercial mall similar to those seen in major cities.

ஓசூருக்கு கிடைக்குமா பெங்களூரு மற்றும் பிறர் பெருநகரங்களில் உள்ளதை போன்று, பல கடைகளும், திரையரங்குகளும் வணிக நிறுவனங்களும் உள்ளடக்கிய பிரம்மாண்ட Mall?.

ஓசூர் பேருந்து நிலையம் அருகே அமைந்திருந்த பழைய நகராட்சி அலுவலக கட்டிடம் அகற்றப்பட்டு, புதிய வணிக வளாக கட்டிடம், உள்ளாட்சித் துறை சார்பில், சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 90 ஆயிரம் சதுர அடியில், கட்டி முடிக்கப்பட்ட நிலையில், இன்று முதலமைச்சர் அவர்களால் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.

ஓசூர் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையர், மற்றும் ஓசூர் நகரின் பெரியோர்கள் முன்னிலையில் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

தனிநபர்களுக்கு கட்டிடத்தை தனித்தனியாக வாடகைக்கு விடுவதற்கு பதிலாக, ஓசூர் மாநகராட்சி, பிற பெரு நகரங்களில் உள்ளதை போன்று "Mall" என்கிற பன்முக வணிக வளாகமாக இக்கட்டிடம் செயல்படும் வகையில், அது குறித்து நன்கறிந்த தனியார் நிறுவனங்களுடன் கலந்து பேசி, ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும், என தன்னார்வலர்களும், ஓசூர் பொதுமக்களும் ஓசூர் ஆன்லைன் வாயிலாக ஓசூர் மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads