Car Glass of TVK Functionary Damaged Near Residence in Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Car Glass of TVK Functionary Damaged Near Residence in Hosur

📅 வெளியீடு நாள்: 14-03-2026

📄 விளக்கம்

The rear glass of a car belonging to Mohamed Anwar Basha, Krishnagiri West District Deputy Secretary of Tamilaga Vettri Kazhagam, was found damaged near his residence in Hosur.

According to the complaint filed at the Hosur Town Police Station, the vehicle had been parked near the house on Rayakottai Road close to the NH-44 junction.

Police examined nearby CCTV footage, which reportedly shows four unidentified individuals arguing on the road late at night. During the altercation, one of them allegedly threw a stone that damaged the rear glass of the parked car.

Police are continuing their investigation to identify the person involved.

ஓசூரில் வீட்டின் அருகே நிறுத்தி இருந்த தமிழக வெற்றி கழகத்தின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணை செயலாளர் கார் கண்ணாடி உடைப்பு!.

ஓசூர் ராயக்கோட்டை சாலை, தேசிய நெடுஞ்சாலை 44 சந்திக்கும் பகுதியில், நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளராக உள்ள முகமது அன்வர் பாஷா என்பவர் வாழ்ந்து வருகிறாராம்.

இவர் கடந்த பல நாட்களுக்கு முன்பு, தனது காரை, வீட்டின் அருகே நிறுத்தி விட்டு சென்றாராம். காலையில் தனது காரின் பின்புற கண்ணாடி உடைந்து இருப்பதை கண்டறிந்து, ஓசூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஓசூர் நகர் காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து, அருகில் உள்ள சி சி டி வி கேமரா காட்சிகளை ஆராய்ந்துள்ளனர்.

அன்றைய நடு இரவில், சாலையில் சென்ற அடையாளம் தெரியாத நான்கு பேர், ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு உள்ளனர். ஒரு கட்டத்தில் சண்டையிட்ட நபர்களில் ஒருவர், நிறுத்தி இருந்த காரின் பின்பக்க கண்ணாடியை, கல்லால் தாக்கி உடைத்து விட்டு அங்கிருந்து சென்ற காட்சி சி சி டி வி கேமராவில் பதிவாகி உள்ளதை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.

காட்சிகளின் அடிப்படையில் குற்றத்தில் ஈடுபட்ட நபர் குறித்து காவல்துறையினர் தீவிரமாக வினவி வருகின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads