HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

TVK Members Celebrate Freedom Fighter Anjalai Ammal's Birth Anniversary in Hosur

Published: 01-06-2026  ·  HosurOnline

விளக்கம்

Tamilaga Vettri Kazhagam members in Hosur paid floral tributes to freedom fighter Anjalai Ammal and distributed sweets as part of her birth anniversary celebrations.

ஓசூர் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கட்சியின் கொள்கை தலைவர்களில் ஒருவரான "மக்கள் சேவகரும் விடுதலைப் போராட்ட வீரருமான அஞ்சலை அம்மாள்" அவர்களின் பிறந்தநாள் விழா மாவட்ட செயலாளர் வேந்தர்கரசன் என்கிற வடிவேல் தலைமையில் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடாக, ராம் நகர் நுழைவாயில் அருகே, அஞ்சலை அம்மாள் படத்திற்கு பூ அலங்காரங்கள் செய்திருந்தனர்.

மாணவரணி அமைப்பாளர் ராம்பாபு, ஓசூர் மாநகர 24 ஆவது வார்டு செயலாளர் முத்து உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று பூ தூவி மரியாதை செலுத்தினர். தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
பகிர்: WhatsApp X Facebook Threads