Quarry Blasting Near Denkanikottai: Villagers Raise Concerns Over House Cracks and Water Shortage | Hosur News Update - Video
Quarry Blasting Near Denkanikottai: Villagers Raise Concerns Over House Cracks and Water Shortage
📅 வெளியீடு நாள்: 11-08-2026
📄 விளக்கம்
Residents near Kachuvadi and Jamalanayakkanathotti, close to Denkanikottai in the Hosur region, have raised concerns over blasting at a nearby granite and marble quarry. Villagers claim that vibrations have caused cracks in house walls, affected borewells and contributed to water shortages. They also say strong blasts create vibrations inside homes. Residents are seeking intervention from the District Collector while continuing to depend on the area for their farmland and livelihoods.
ஓசூர் அருகே குவாரியில் வைக்கப்படும் வெடிகள்... பாறைகளை மட்டுமல்ல... அருகில் வாழும் மக்களின் வாழ்க்கையையும் அதிரச் செய்கிறதா?
தேன்கனிக்கோட்டை அடுத்த பாலத்தோட்டனபள்ளி அருகே அமைந்துள்ளன கச்சுவாடி மற்றும் ஜமலநாயக்கனதொட்டி.
இப்பகுதியில், தமிழ்நாடு அரசின் கனிமவளத்துறை அனுமதியுடன் ஏராளமான கிரானைட் மற்றும் மார்பிள் குவாரிகள் இயங்கி வருகின்றன.
கச்சுவாடி அருகே செயல்படும் குவாரியில், வைக்கப்படும் வெடிகளால், இப்பகுதியில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இதுமட்டுமல்ல...
பாறைகளில் ஆழமாக துளையிட்டு வெடி வைப்பதால், அருகிலுள்ள ஆழ்துளைக் கிணறுகளும் பாதிக்கப்பட்டு, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
வெடிகள் வெடிக்கும் போது, வீடுகளில் பரண்களில் வைக்கப்பட்டுள்ள பாத்திரங்கள் அதிர்வில் கீழே விழுவதாகவும், இதனால் குழந்தைகள் காயமடையும் பேராபத்து இருப்பதாகவும் மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
“வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து செல்லலாமே?”
அதுவும் இவர்களுக்கு எளிதான தீர்வல்ல.
ஏனெனில்... இவர்களின் விளைநிலங்களும், வாழ்வாதாரமும் இந்தப் பகுதியில்தான் உள்ளது.
ஒருபுறம் வீடுகளின் பாதுகாப்பு குறித்த அச்சம்... மறுபுறம் தண்ணீர் தட்டுப்பாடு... ஆனால், வாழ்வாதாரத்தை விட்டுவிட்டு வெளியேறவும் முடியாத நிலை.
மாவட்ட ஆட்சியர், இந்தக் குவாரியில் அனுமதிக்கப்பட்ட blasting அளவு, நேரம், அதிர்வு ஏற்படுத்தும் அளவு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை ஆய்வுக்கு உட்படுத்தி, பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குவாரி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.








