Denkanikottai Taluk Office: Poor Public Facilities Raise Questions Over Cleanliness and Parking | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Denkanikottai Taluk Office: Poor Public Facilities Raise Questions Over Cleanliness and Parking

📅 வெளியீடு நாள்: 11-08-2026

📄 விளக்கம்

Visitors to the Denkanikottai Taluk Office campus near Hosur have raised concerns over inadequate public facilities. A seating area meant for visitors was found being used for two-wheeler parking, including vehicles displaying “REVENUE” stickers. Toilets inside the campus were also found either locked or poorly maintained.

இது என்ன தேன்கனிகோட்டைக்கு வந்த வேதனை? "தேன்கனிகோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் எல்லா அலுவலகங்களும் ஒருங்கிணைந்து இருக்கிறது, ஆனால் வந்து செல்லும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லை" என புலம்பும் மக்கள்!

"சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்..." என்ற பாடல் வரிகளை எழுதிய கவிஞர், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக தூய்மை அவலத்தை பார்த்திருந்தால் "சுத்தம் என்பது நமக்கு... சுத்தமாக இல்லையே" என புலம்பும் பாடலாக எழுதி இருப்பார்!

வளாகத்தில், நாம் கண்ட முதல் காட்சி, அலுவலகங்களுக்கு வந்து செல்லும் பொதுமக்கள் இளைப்பாறவும், தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும் அமைக்கப்பட்ட பொது மக்கள் அமருமிடம், வருவாய்த்துறை ஊழியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, இரண்டு சக்கர வண்டி நிறுத்துமிடமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது காட்சி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, வளாகத்தினுள் பல்வேறு கழிவறைகள் இருப்பினும், ஒன்று பூட்டப்பட்டுள்ளது, மற்றொன்று பாம்பு தேள் போன்றவற்றின் புகலிடம் போல் காட்சியளிக்கிறது.

இதனால் மக்கள், அளவீட்டாளரின் அலுவலக சுவற்றை கழிவறை என கருதி சிறுநீர் கழிக்கும் அவல நிலை உள்ளது. அதுவும், வட்டாட்சியர் அலுவலகம் நேர் எதிர்ப்புறம், திறந்த வெளியில் மக்கள் தங்கள் அவசரத்தை போக்கிக் கொள்கின்றனர்.

முன்மாதிரியாக திகழ வேண்டிய வட்டாட்சியர் அலுவலக வளாகமே இந்த நிலை என்றால், மாவட்டத்தின் பிற அலுவலகங்களின் நிலை எவ்வாறு இருக்கும்?

பகிர்: WhatsApp Twitter Facebook Threads