HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

"Safer at the Border": Retired Soldier and Kamban Nagar Residents Battle Encroachment and Drainage Crisis in Hosur

Published: 23-10-2026  ·  HosurOnline

விளக்கம்

An in-depth investigative report on the land dispute in Kamban Nagar. The article details the history of the layout since 1996, the alleged encroachment of public 'Vari Poramboke' land, the health risks posed by stagnant water, and the legal perspective on restoring natural waterways in hilly terrains like Hosur.

பாகிஸ்தான் எல்லையில் கூட பாதுகாப்பாக உணர்ந்தேன்! ஓசூர் மாநகராட்சியில் உயிர் பயத்துடன் வாழ வேண்டி உள்ளது! ஓசூரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வேதனை ஏன்?

கொசு பண்ணை பார்த்திருக்கிறீர்களா? டெங்கு கொசு பண்ணை இதோ உங்கள் பார்வைக்காக! ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மட்டுமல்ல, குழந்தைகளும் முதியவர்களும், இதனால் அச்சத்துடன் வாழும் சூழ்நிலை!

ஓசூர் சீத்தாராம் நகர் மேடு அருகே 50 வீடுகளை கொண்டது கம்பன் நகர். 1996-ல், அண்ணாமலை என்பவரால், சென்னத்தூருக்கு உட்பட்ட சர்வே எண் 1125ல் வீட்டுமனை பிரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. சர்வே எண் 1126 வாரி புறம்போக்கு என்று கூறுகிறார்கள்.

வீட்டு மனைகளை தொட்டு அமைந்துள்ள தன்னுடைய விற்கப்படாத 40 சென்ட் நிலம் வழியாக புறம்போக்கு வரை வடிகால் ஓடை அமைத்துத் தருவதாக, அண்ணாமலை உறுதி அளித்ததாக மனைகளை வாங்கியவர்கள் கூறுகின்றனர்.

பின்னர், அரசியல் செல்வாக்கு மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உதவியுடன் சிலர் அந்த புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விற்கப்படாமல் இருந்த 40 சென்ட் நிலத்தில் ஏதோ ஒரு சட்ட சிக்கலை உணர்ந்த அண்ணாமலை, குறைந்த விலைக்கு திமுகவைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு விற்றதாக கூறப்படுகிறது.

இப்போது கடை கோடியில் அமைந்திருக்கும் ராணுவ வீரர், எப்போது வேண்டுமானாலும் தன் வீட்டினுள் வெள்ளம் புகலாம் என அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்.

மாநகராட்சி ஆணையர் மனு கொடுத்த நிலையில், அது ஓசூர் சார் ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அங்கிருந்து வட்டாட்சியருக்கும், வட்டாட்சியரிடம் இருந்து வருவாய் ஆய்வாளர் மற்றும் சர்வேயருக்கு அனுப்பிய நிலையில் உள்ளதாகவும், இதனால் பல மாதங்களாக தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து சட்ட ஆலோசகருடன் நாம் கலந்துரையாடிய போது "ஓசூர் போன்ற மலைச்சரிவுப் பகுதியில், நிலத்தின் இயற்கையான சரிவையும், மழைநீர் காலங்காலமாகச் சென்ற தாழ்வான பாதையையும் புறக்கணிக்க முடியாது. அந்த இயற்கையான நீர்வழியை ஆய்வு செய்து, சட்டப்படி வடிகால் வசதியை ஏற்படுத்துவது அரசு அலுவலர்களின் பொறுப்பு. மாநகராட்சியும் வருவாய்த் துறையும் இணைந்து நடவடிக்கை எடுத்தால், கம்பன் நகர் மக்களின் வெள்ள அபாயத்திற்குத் தீர்வு கிடைக்கும்!" என்று கூறினார்.

ராணுவ வீரரின் கண்ணீரைத் துடைப்பார்களா அரசு அலுவலர்கள்?
பகிர்: WhatsApp X Facebook Threads