HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

19 Sovereigns of Gold and Cash Stolen from Software Engineer's House in Hosur Ellamma Kothur

Published: 21-10-2026  ·  HosurOnline

விளக்கம்

A detailed report on the burglary that took place in the Ellamma Kothur area near Perandapalli. The article covers the theft of 19 sovereigns of gold and ₹50,000 cash, the forensic investigation by ADCO police, and the tactical use of chili powder by the burglars to evade sniffer dogs.

ஒசூரில் மீண்டும் உடைபட்டது கதவு! தொடரும் விடுமுறை நாள் திருட்டு!

ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி காந்திநகர் அருகே எல்லம்மா கொத்தூா் பகுதியில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

பூஜை விடுமுறைக்காக தனது ஊருக்கு குடும்பத்துடன் சென்று, கடந்த நாள் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பி உள்ளார்.

அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 19 பவுன் தங்க நகை, ரூ. 50 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது.

புகாரின் பேரில், அட்கோ காவல் துறையினர் நிகழ்விடத்துக்கு சென்று மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணா்களைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தினா்.

திருடா்கள் மிளகாய் பொடியை வீட்டைச் சுற்றி போட்டுவிட்டு சென்றுள்ளதால் மோப்ப நாய் எங்கும் செல்லாமல் நின்றது.

இதுகுறித்து அட்கோ காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பகிர்: WhatsApp X Facebook Threads