HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Utthanapalli Toll Gate Controversy: Residents of 45 Villages Demand FastTag Exemptions on NH 844

Published: 21-10-2026  ·  HosurOnline

விளக்கம்

A detailed report on the growing opposition to the new toll plaza between Beerjepalli and Utthanapalli. The article explores the villagers' demands for free access, their concerns over future GPS-based tolling, and the plea for a technological solution to recognize local residents' vehicles.

கொந்தளிக்கும் உத்தனப்பள்ளி! அமைய இருக்கும் டோல்கேட் குறித்தான சர்ச்சை!

பீர்ஜேப்பள்ளி - உத்தனப்பள்ளி இடையே தேசிய நெடுஞ்சாலை 844-ல், விரைவில் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது சுங்கச்சாவடி.

உத்தனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த சுமார் 45 ஊர் மக்கள், அன்றாடத் தேவைகளுக்கு இந்த சுங்கச்சாவடியை கடக்க வேண்டிய சூழல் உள்ளது.

நெடுஞ்சாலை அமைப்பதற்கு, அரசு கூறிய விலையில், தங்களது வாழ்வாதாரமாக திகழ்ந்த விளை நிலங்களை விட்டுக் கொடுத்த தங்களுக்கு, இந்த சுங்கச்சாவடி வழியாக பயணிக்க கட்டணம் பெறக் கூடாது என்ற கோரிக்கையை அப்பகுதி மக்கள் விடுத்து வருகின்றனர்.

80 கிலோ மீட்டர் வேகத்தில், அந்த சுங்கச்சாவடியை கடந்தாலும் கட்டணம் பெறப்படும் என்றும், பின் நாட்களில் GPS தொழில்நுட்பத்தில் கட்டண நடைமுறை பின்பற்றப்பட்டால், சாலையில் ஏறி இறங்கினாலே சுங்கக் கட்டணம் பெறப்படும் நிலை ஏற்படலாம் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஆகவே, தங்கள் பகுதியைச் சேர்ந்த மக்களின் FastTag-ல் மென்பொருள் மூலமாக இந்த சுங்கச்சாவடி மற்றும் GPS கட்டண முறையில் விலக்கு அளிக்கும் விதமாக தொழில்நுட்ப வகையில் மாற்றங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads