Did you know Hosur kings once saved a Chola emperor? | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Did you know Hosur kings once saved a Chola emperor?

📅 வெளியீடு நாள்: 15-09-2025

📄 விளக்கம்

🏰 Hosur King Who Rescued a Chola Emperor & Changed History! ⚔️👑

A forgotten chapter of South Indian history ✨:

12th century – Cholas weakened under Pandya dominance ⚖️

Chola King Rajaraja III captured by Kadava Kopperunjingan ⛓️

Hosur’s Hoysala King Veera Narasimman II steps in 💪

Rescues the Chola emperor, marries him to his daughter 💍

Defeats the Pandyas in battle at Mahendramangalam 🏹

👉 A 1000-year-old story of courage, alliance, and survival from Hosur’s soil!

#HosurHistory #TamilHistory #CholaDynasty #Oysala #SouthIndianHistory #Heritage #AncientIndia

ஓசூரை ஆட்சி செய்த அரசன், சோழ அரசனை சிறையில் இருந்து மீட்டு, பெண்ணையும் திருமணம் முடித்துக் கொடுத்து அரவணைத்த வரலாறு!

பன்னிரண்டாம் நூற்றாண்டில், சோழர்கள், பாண்டியர்களுக்கு கப்பம் கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இருப்பினும், மூன்றாம் ராஜராஜ சோழன், பாண்டியர்களுக்கு தொடர்ந்து கப்பம் கட்டுவதில் போக்கு காட்டி வந்தான்.

கோபம் கொண்ட பாண்டியர்கள், மூன்றாம் ராஜராஜ சோழனை அரசாட்சியிலிருந்து விரட்டி விட்டனர். இதை வாய்ப்பாக பயன்படுத்தி, பல்லவர் வழிவந்த காடவ சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன் சிறைப்படுத்தினான்.

அப்போது ஓசூர் பகுதியை, ஒய்சாள அரசன் இரண்டாம் வீர நரசிம்மன் ஆண்டு வந்தான். சோழன் சிறைபிடிக்கப்பட்டதறிந்து, தனது படைகளை அனுப்பி, மூன்றாம் ராஜராஜ சோழனை மீட்டு வந்து, தனது மகளையும் திருமணம் முடித்துக் கொடுத்தான். மேலும், முசிறி, தொட்டியம் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மகேந்திரமங்கலம் என்கிற ஊரில், பாண்டியர்களுடன், தாமே போர்க்களத்தில் போரிட்டு, பாண்டியர்களையும் சோழ நாட்டை விட்டு பின்வாங்க செய்தான்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads