Daily Hosur News · Video
Migrating Elephants Ravage Cauliflower and Cucumber Farms in Gomepalli; Farmers Seek Compensation
விளக்கம்
A detailed report on the agricultural losses in Gomepalli village near the Sanamavu forest border. The article features the story of Sarankumar, a young farmer whose ₹3 lakh investment was hit by a midnight elephant raid, and highlights the recurring issue of crop damage during the annual migration season.புலம் பெயரும் யானைகள்... புலம்பும் உழவர்கள்!
ஓசூர் சானமாவு காடு அருகே, பீர்ஜேப்பள்ளி அடுத்து அமைந்துள்ளது கோமேப்பள்ளி எனும் ஊர். இங்கு சுமார் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் சரண்குமார் என்ற இளைஞர், மூன்று லட்சம் ரூபாய் செலவு செய்து பூக்கோசு எனப்படும் காலிபிளவர் பயிரிட்டுள்ளார்.
வலசை வரும் வழியில், இவரது தோட்டத்தில் நள்ளிரவில் புகுந்த யானைகள், செடிகளை மிதித்து மற்றும் உண்டு சென்றதால் சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விளை பொருட்கள் வீணாகி உள்ளதாக கூறுகிறார்.
மேலும் அருகில் இருந்த வெள்ளரிப் தோட்டத்தில் புகுந்து, அங்கிருந்த வெள்ளரிக்காய்களை ருசித்துச் சென்றுள்ளன. அந்தத் தோட்டம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
யானைகளால் ஏற்பட்ட பாதிப்பிற்கு, தமக்கு இழப்பீடு வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.