Daily Hosur News · Video
Hosur Corporation Commissioner and Team Recover 10-Sovereign Gold Chain Accidentally Thrown in Trash
விளக்கம்
A detailed report on the successful recovery operation in MM Nagar, Hosur. The article highlights the coordination between the resident, the ward member, and Commissioner Muhammad Shabbir Alam, and praises the 20 sanitation workers who meticulously searched the garbage to find the lost gold.பத்து பவுன் தங்கச் சங்கிலியை குப்பையில் வீசிய பெண்! தகவல் கிடைத்தவுடன், விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, நகையை மீட்டுக் கொடுத்த ஓசூர் மாநகராட்சி ஆணையர் முகம்மது ஷபீர் ஆலம்!
ஓசூர் மாநகராட்சி 17 வது வார்டுக்கு உட்பட்ட எம் எம் நகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 10 பவுன் தங்க சங்கிலியை சிறிய பை ஒன்றில் வைத்திருந்துள்ளார். வீட்டில் குப்பையை சேகரித்தவர்கள் இந்த பையையும் குப்பை என கருதி, குப்பை தொட்டியில் போட்டுள்ளனர்.
இந்த நகை பை, குப்பை சேகரிக்கும் ஊழியரிடம் துவங்கி, டிராக்டர் வரை இடம் மாறிய நிலையில், குப்பை கிடங்கை நோக்கி பயணித்துள்ளது.
இந்நிலையில், நகையை காணவில்லை என்பதை பெண் கண்டறிந்து திகைத்துள்ளார். உடனடியாக, பகுதி வார்டு உறுப்பினர் மூலம் மாநகராட்சியின் உதவியை நாடிய நிலையில், மாநகராட்சி ஆணையர், 20 ஊழியர்களை பணியமர்த்தி, மூன்று மணி நேரம் தேடி, நகையை மீட்டு பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.
விரைந்து செயல்பட்ட மாநகராட்சி ஆணையருக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் பொதுமக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.