Footpath Vendors and Traffic Congestion Emerge as Key Urban Challenge in Hosur | Hosur News Update - Video
Footpath Vendors and Traffic Congestion Emerge as Key Urban Challenge in Hosur
📅 வெளியீடு நாள்: 10-02-2026
📄 விளக்கம்
As Hosur continues to expand rapidly, the presence of footpath vendors has become a major urban issue. While roadside shops provide livelihoods for many families, residents say they also contribute to traffic congestion on key roads. In Kamaraj Nagar, several roadside shops were removed as part of municipal action, prompting vendors to express concern over livelihood loss. Social activists have called for preventive measures at the initial stage to avoid such situations.
ஓசூரின் சாலைகளும் நடைபாதை வியாபாரிகளும் - ஓசூர் நகரின் வளர்ச்சிக்கு ஒரு சவாலா?!.
ஓசூர் வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையில், ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக, சாலையோர நடைபாதைகளில் கடைகள் அமைத்து தொழில் செய்கின்றனர். இதனால் ஓசூரில் முதன்மையான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், இன்று காமராஜ் நகர் பகுதியில் உள்ள சாலையோர கடைகள், மாநகராட்சியின் நடவடிக்கைகளின் அடிப்படையில் அகற்றப்பட்டன.
இதுகுறித்து நடைபாதை வியாபாரிகள் பேசும் போது, கையில் இருந்த சேமிப்பை செலவழித்து கடைகள் அமைத்த நிலையில், திடீரென அகற்றப்படுவது தங்கள் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
சாலையோர ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும் என்றால், அத்தகைய கடைகள் புதிதாக அமைக்கப்படும் தொடக்க நிலையிலேயே
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.








