Why Hosur bridge Work Stopped Midway! 🚧 Exclusive Update | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Why Hosur bridge Work Stopped Midway! 🚧 Exclusive Update

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

🚨 Exclusive Hosur Online News 🚨

The much-awaited Hosur Bus Stand flyover bearing replacement work finally began this week. But within hours, the work was suddenly halted.

👉 What really happened?

Sources say a worker was injured after a grinding wheel accident ⚙️.

Instead of being taken to the Government Hospital, he was rushed secretly to a private hospital.

Locals also allege that traditional rituals before work were skipped, sparking controversy.

⏳ For now, the work is temporarily stopped, but is expected to resume soon. Stay tuned for further updates only on Hosur Online.

ஓசூர் மேம்பால பணி துவங்கியது. ஆனால் பாதியில் விடப்பட்டது எதனால்? ஓசூர் ஆன்லைனுக்கு கிடைத்த கமுக்கமான செய்தி உங்கள் பார்வைக்காக.

கடந்த சனிக்கிழமை அன்று, பாலத்தில் பொருத்துவதற்கு தேவையான பியரிங் ஓசூருக்கு வந்து சேர்ந்து விட்டது. அதை பொருத்துவதற்கான பணிகள் கடந்த நாள், அதாவது திங்கள்கிழமை துவங்கியது. வட இந்திய தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டனர். பணிகள் துவங்கிய சிறிது நேரத்தில், அவர்கள் பயன்படுத்திய கிரைண்டிங் வீல் கட்டுப்பாட்டை இழந்து, மற்றொரு தொழிலாளி மீது விழுந்ததாகவும், இதில் அவர் காயம் அடைந்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் எம்மிடம் தெரிவித்தனர். காயமடைந்தவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், கமுக்கமாக ஆவலப்பள்ளி சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவர் முதலுதவி பெற்று திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கமாக பணிகள் துவங்கப்படும் பொழுது நடத்தப்படும் வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படாததால் தான், இத்தகைய இரத்தக்காவு வாங்கும் நிகழ்வு நடந்துள்ளது என சிலர் கூறியதை தொடர்ந்து, பணிகள் இடைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் மீண்டும் பணிகள் துவங்கி அடுத்த சில நாட்களில் முடிவுறும்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads