ஒசூரில் செப்டம்பர் 26-ல் பிரம்மாண்ட ‘தொழில் மற்றும் வணிக சங்கமம்’ நிகழ்ச்சி: தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு!

1 / 4
ஒசூர் மூக்கண்டப்பள்ளியில் உள்ள ஹில்ஸ் ஹோட்டலில் (Hills Hotel), வரும் செப்டம்பர் 26ஆம் தேதி மாலை 5:00 மணிக்கு, 'தி ரைஸ் ஒசூர்' (The Rise Hosur) அமைப்பின் சார்பில் 'தொழில் மற்றும் வணிக சங்கமம்' என்ற பிரம்மாண்ட தொழில்முனைவோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள், சிறு மற்றும் பெரு வணிகர்கள், தொழில்முனைவோர் ஆகியோர் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இச்சந்திப்பின் மூலம் வணிகர்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கலந்துரையாடவும், தங்களுடைய தொழில் தொடர்புகளை (Networking) விரிவுபடுத்தி, வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு வளர்த்துக் கொள்வதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புதிய தொழில் வாய்ப்புகளைத் தேடும் மற்றும் தங்களது நெட்வொர்க்கை பலப்படுத்த விரும்பும் அனைத்து தொழில்முனைவோரும் இதில் பங்கேற்றுப் பயன்பெறுமாறு 'தி ரைஸ் ஒசூர்' அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.