HosurOnline

தமிழகத்திலேயே முதன்முறை: ஓசூர் பட்டாசு கடைகளில் "ஸ்மார்ட்" தானியங்கி தீயணைப்பு தொழில்நுட்பம்!

2023 அத்திப்பள்ளி பட்டாசு விபத்து படிப்பினையாகக் கொண்டு, இந்த ஆண்டு தீபாவளிக்கு ஓசூர் மற்றும் ஜூஜுவாடி பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் தமிழகத்திலேயே முதல் முறையாக ‘மாடுலர் எக்ஸ்டிங்குஷர்’ (Modular Extinguisher) எனப்படும் அதிநவீன தானியங்கி தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இக்கருவி செயல்படும் விசித்திர தொழில்நுட்பம்:

• மனித உதவி தேவையில்லை: கடையில் ஆட்கள் இல்லாத நள்ளிரவு நேரத்திலும் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டால் இது தானாகவே இயங்கும்.

• வெப்ப உணர்வி (Heat Sensor): கடையின் மேற்கூரையில் மாட்டப்படும் இக்கருவி, அறையின் வெப்பநிலை 60 டிகிரி செல்சியஸைத் தாண்டும் போது அலர்ட் ஆகும்.

• கண்ணாடி குடுவை தொழில்நுட்பம்: அதிக வெப்பத்தால் கருவியின் அடிப்பகுதியில் உள்ள திரவம் விரிவடைந்து, அங்குள்ள கண்ணாடிக் குடுவை உடையும்.

• தீயை அணைக்கும் பொடி: குடுவை உடைந்ததும், உள்ளே இருக்கும் 'மோனோ அம்மோனியம் பாஸ்பேட்' பொடி நாலாபுறமும் 40 அடி சுற்றளவிற்குத் தெளிக்கப்பட்டு நொடியில் தீயைக் கட்டுப்படுத்தும். மேலும், மின் இணைப்பைத் துண்டிக்க 'ஆட்டோ ஆஃப்' சுவிட்சுகளும் வைக்கப்பட்டுள்ளன.

ஓசூர் வட்டத்தில் 118 கடைகளில் இந்த விபத்தில்லா பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.