HosurOnline

ஓசூரில் மதுரை அடுத்த ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த பரமன் மாடியில் இருந்து கீழே விழுந்து பலி!

ஓசூர் கோகுல் நகரில், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் தங்கி, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே குன்னுார் கிராமத்தை சேர்ந்தவர் 50 வயது பரமன் பணிபுரிந்து வந்துள்ளார்.  அந்த கட்டிடத்தில் கட்டிடம் மேஸ்திரி ஆக பணிபுரியும் 
இவர், கடந்த ஐந்தாம் நாள், ஐந்தாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த போது, விடி காலை 5 மணி அளவில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தாராம். 
உடனடியாக மீட்ட அவர் உடன்படி புரியும் ஊழியர்கள், அவரை ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கிருந்து மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் மருத்துவத்திற்காக மாற்றப்பட்ட அவர் கடந்த நாளுக்கு முந்தைய நாள் உயிரிழந்துள்ளார். ஓசூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விளங்கி வருகின்றனர்.