ஓசூர் மாநகராட்சி 37வது வார்டில் வடிகால் வசதிகளை கமிஷனர் சபீர் முகமது ஆலம் ஆய்வு!

ஓசூர் மாநகராட்சி 37வது வார்டுக்குட்பட்ட சதாசிவ நகர் மற்றும் மஞ்சுநாதா நகரில் உள்ள வடிகால் வசதிகளை மாநகராட்சி ஆணையர் சபீர் முகமது ஆலம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மிடிகிரிப்பள்ளி பூங்கா மற்றும் தண்ணீர் தொட்டியையும் பார்வையிட்ட அவர், அங்குள்ள தேவைகள் மற்றும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழுத் தலைவர் சென்னீரப்பா மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.