HosurOnline

ஓசூரில் சட்டவிரோதமாக M-Sand கடத்தல்: வாலிபர் கைது, வாகனம் பறிமுதல்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டை சாலை அசோக் பில்லர் அருகே வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்திச் சோதனை செய்தபோது, உரிய அனுமதியின்றி தலா 2.5 யூனிட் M-Sand மற்றும் உடை கற்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட நபரை ஓசூர் டவுன் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும், அதிலிருந்த M-Sand மற்றும் உடை கற்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கைதான நபரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.